உள்ளூர் செய்திகள்

இலவச தையல் எந்திரம் வழங்க கோரிக்கை

Published On 2023-04-12 08:29 GMT   |   Update On 2023-04-12 08:29 GMT
  • இலவச தையல் எந்திரம் வழங்க ராமநாதபுரம் கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • 3 மாத கால பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் முத்தமிழ் அறக்கட்டளை சார்பாக பல்வேறு பொதுநல சேவைகளை செய்து வருகின்றனர். பசியில்லா தமிழகம் என்ற திட்டம் மூலம் தினந்தோறும் இலவச உணவு வழங்கி ஏழை எளியோரின் பசியை போக்கி வருகின்றனர். மேலும் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் குழு ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு சிறு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி முதல் கட்டமாக 30 பெண்களுக்கு ராமநாதபுரம் நேருயுவகேந்திராவுடன் இணைந்து தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 மாத கால பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயிற்சி பெற்ற 30 பெண்களும் இலவச தையல் எந்திரம் வழங்க கோரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். கலெக்டரும் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன், தையல் பயிற்சியாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News