அரசு பஸ் ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
- அரசு பஸ் ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை விடுத்தனர்.
- ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் ஊழியர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகம் நகா் கிளையில் டிரைவராக பணியாற்றி வருப வா் முருகேசன் (50). இவா் ராமநாதபுரத்திலிருந்து அழகன்குளத்துக்கு செல்லும் டவுன் பஸ் ஓட்டி வந்த போது, சிலா் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனா். அவர் களை ஓட்டுநா், பஸ் உள்ளே செல்லும் படி அறிவுறுத்தி னாா்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் ராம நாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தேவிபட்டினம் போலீசார் இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் இந்த நிலையில் இரண்டு பேரையும் குண்டா் சட்டத் தில் கைது செய்யக்கோரி நேற்று நகா் கிளை போக்குவரத்து ஊழியா்கள், 57 பஸ்களை இயக்காமல், கிளையின் நுழைவாயிலில் அமா்ந்து தா்ணாவில் ஈடு பட்டனா்.
இதைத்தொடா்ந்து, அங்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரி பத்மநாதன், ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் ஊழியர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் இன்று காலை ராமநாதபுரத்தில் இருந்து சித்தார் கோட்டை வழியாக அழகன்குளம் வழித்தடத்தில் செல்லும் டவுன் பஸ் அனைத்தும் தேர்போகி பஸ் நிறுத்தத்து டன் திருப்பி செல்லப் பட்டது, இதனால் பனைக்குளம், அழகன் குளம், ஆற்றாங்கரை மாணவ, மாணவிகளும் வியாபாரிகளும், பொது மக்களும் பெரிதும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து போக்கு வரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது, புதுவலசை கிராமத்தில் இருந்து முக்கிய நபர்களை அழைத்து ராம நாதபுரம் டி.எஸ்.பி தலைமை யில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்னர் அந்த பகுதிக்கு பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்தார்.