- அபிராமத்தை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னனர்.
- சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமான ஊராட்சிகளை கொண்ட யூனியனாக கமுதி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இது அபிராமம் பேரூராட்சி மற்றும் 53 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.
பரமக்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகள், முது குளத்தூர் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளை சேர்த்து அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து அபிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அபிராமம் மற்றும் அதை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.
அபிராமத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் பெறவும், அடிப்படை வசதிகளை பெறவும் சிரமப்பட வேண்டியதுள்ளது.
இதனை தவிர்க்க அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பல்வேறு கட்ட அகிம்சை வழி போராட்டங்களை நடத்த தயராக உள்ளோம்.
மத்திய-மாநில அரசின் நிதி மற்றும் நலத்திட்டங்கள் இந்த கிராமங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இன்று வரை உள்ளது என்றனர்.