திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
- திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழிற்துறை ஆணையர் அர்ச்சனா பட்னாயக் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டபப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்னாயக் பேசுகையில், முதல்-அமைச்சர் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அத்தகைய திட்டங்களை பொதுமக்கள் சிரமமின்றி கிடைத்திடும் வகையில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை செயல் படுத்திட வேண்டுமென அலுவலர்களிடம் கேட்டு கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.