- காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவடம் கமுதி வட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள அச்சங் குளம், அகத்தாரி ருப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தரமற்ற கெட்டுபோன குளிர் பானங்கள், பழங் களை வெயிலை சாதகமாக பயன்படுத்தி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
அபிராமம் பகுதியில் கடைகள் மற்றும் சாலையோர தள்ளுவண்டிகளில் ஆரஞ்சு. ஆப்பிள், தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இனிப்பிற்காகவும், சுவைக்காகவும் சாக்கிரின் பொடி மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகையான குளிர் பானங்களை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வாங்கி குடித்துவிட்டு சளி, இருமல், வயிற்றுபோக்கு, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், சமுக ஆர்வலர்கள் கூறியாதவது:-
அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யில் தரமற்ற குளிர்பானங்கள், பழ ஜூஸ்களை கத்திரி வெயில் முடிந்த பின்பும் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் கொடுமையை சமாளிக்க இதுபோன்ற தரமற்ற குளிர்பானங்களை குடிக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படு கின்றனர். எனவே சமந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.