- அறிவியல் அற்புதம் கலந்துரையாடல் நடந்தது.
- வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வித்துறையின் சார்பில் அறிவியல் அற்புதம் என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.
தேர்த்தங்கல் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் "தொலை நோக்கி பார்வை" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. முதன்மை கருத்தாளராக தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளார் சொக்கநாதன், திருச்சி அண்ணா கோளரங்க உயர் தொழில்நுட்ப அலுவலர் ஜெயபால் கலந்து கொண்டனர்.
தொலைநோக்கியின் வரலாறு, அதன் வகைகள், பயன்பாடு, பள்ளிகளில் வானவியல் மன்றம் தொடங்குதல், தொலை நோக்கி, பைனாகுலர், வானியல் கருவிகள், வானியல் அறிஞர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுதல், சூரிய- சந்திர கிரகண நாட்கள், நிழல் இல்லா நாள், நீண்ட பகல், இரவு நாட்கள், சம இரவு-பகல் நாட்கள், வானியல் மேற்படிப்பு அதில் உள்ள வேலை வாய்ப்புகள், இஸ்ரோவின் வரலாறு, செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சி, அதில் உள்ள படிப்புகள், வேலை வாய்ப்புகள், டெலஸ்கோப் செய்முறை பயிற்சி, ஆசிரியர்கள்- மாணவர்களுக்கான ஆஸ்ட்ரானமி பயிலரங்கு, ஆஸ்ட்ரோ போட்டோ கிராபி, போஸ்டர் தயாரிப்பு போட்டிகள், ஆஸ்ட்ரானமி இளைஞர் மாநாடு நடத்துதல், கோடை கால பயிற்சிகள், அறிவியல் பாடல்கள், ஆஸ்ட்ரோ ஒலிம்பியார்ட், ஆஸ்ட்ரானமி மென்பொருட்கள் ஆகிய தலைப்புகளில் கலந்துரை யாடப்பட்டது.
நிகழ்ச்சியை நயினார் கோவில் வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இல்லம் தேடிக்கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி நன்றி கூறினார்.