உள்ளூர் செய்திகள்

தமிழக வீரர்களுக்கான தேர்வு போட்டி

Published On 2023-02-28 08:41 GMT   |   Update On 2023-02-28 08:57 GMT
  • தமிழக வீரர்களுக்கான தேர்வு போட்டி ராமநாதபுரத்தில் தொடங்கியது.
  • 25 பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழக அணியில் விளையாட உள்ளனர் என்றார்.

ராமநாதபுரம்

தென் மாநில ஆக்கி போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு போட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலு மாணிக்கம் செயற்கை இழை ஆக்கி மைதானத்தில் தொடங்கியது. இதுகுறித்து ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில் தென் மாநிலங்களுக்கு இடையேயான 18 வயது பிரிவில் முதலாவது ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் வருகிற 19-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமானை சேர்ந்த 240 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 பேர் பங்கேற்றனர். இவர்களில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு தமிழக அணியில் விளையாட உள்ளனர் என்றார். ஆக்கி சங்க தலைவர் மதுரம் அரவிந்தராஜ், முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாநில தடகள சங்க இணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News