உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு மலரை முஹம்மது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹாமீதுஇப்ராஹிம் வெளியிட, சிறப்பு விருந்தினர் அப்துல் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.

கீழக்கரை கல்லூரியில் கருத்தரங்கம்

Published On 2022-06-08 10:49 GMT   |   Update On 2022-06-08 10:49 GMT
  • கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் நிறைவு விழா நடந்தது.
  • தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கீழக்கரை

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வேதிப்பொறியியல் மற்றும் கட்டிடபொறியியல் துறை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின ஆர்டிமியாவின் பயன்பாடுகள் பற்றிய நிறைவுநாள் கருத்தரங்கம் முஹம்மது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹாமீது இப்ராஹிம் தலைமையில் நடந்தது.

முதல்வர் முஹம்மது ஷெரீப்,துணை முதல்வர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி அகடமிக் தலைவி அழகிய மீனாள் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு ஆர்டிமியாவின வளர்ச்சி மற்றும் அதன் பங்களிப்பு பற்றி பேசினார்.

ஆர்டிமியாவினை பயன்படுத்தி உப்பளங்களில் உப்பின் உற்பத்தியை அதிகரிக்கவும் இறால் பண்ணைகளில் இறால்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 4மாத வகுப்புகளில் கற்றுக்கொண்ட ஆர்டிமியாவின் பயன்பாடுகளை பயன்படுத்தி தொழில்முனைவோராக உருவாவதற்கு வாழ்த்து க்களை தெரிவித்தார்.

கருத்தரங்கு மலரை முஹம்மது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹாமீது இப்ராஹிம் வெளியிட சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொண்டார். பயிற்சியில் கலந்து கொண்ட வேதிப் பொறியியல் துறை மற்றும் கட்டிடபொறியியல் துறையைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேதிப்பொறியியல் துறை பேராசிரியர் சண்முகபிரியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News