சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
- மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அமிர்த வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. கல்வி துறை, மதுரை சர்வோதய பப்ளிக் குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் இரட்டை கம்பு 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவி பர்ஹத் ஜபீன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். ஒற்றை கம்பு பிரிவில் 12 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்கள் திவ்யதீக்க்ஷிதா, ஸ்டாண்லி ஆண்டர்சன் இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் மற்றும் பயிற்சியாளர்கள் திருமுருகன், செல்லபாண்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.