பொதுமக்களின் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்
- பொதுமக்களின் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதிகம் வரப் பெற்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அதிகம் வரப் பெற்றது. பொது மக்களிட மிருந்து வரப்பெற்ற 265 மனுக்களை உரிய முறையில் பரிசீலனை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தீர்வு கிடைத்திடவும், மனுக்களின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு தக வல் தெரிவித்திட வேண்டும் எனவும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென வும் மாவட்ட கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தனித்துணைஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.