உள்ளூர் செய்திகள்

 கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

Published On 2022-08-21 08:02 GMT   |   Update On 2022-08-21 08:02 GMT
  • கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.
  • சிகிச்சைக்கான உயர்தர கருவிகள் இல்லாத நிலையில் உள்ளது.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த கட்டிடம் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவ சிகிச்சைக்கான உயர்தர கருவிகள் இல்லாத நிலையில் உள்ளது. கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் இந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக அரசு ஆஸ்பத்திரிக்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ராமநாதபுரம் வந்தார். கீழக்கரை நகர தி.மு.க செயலாளர் பஷீர் அகமது, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கத்திடம் கீழக்கரையில் பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் கோரிக்கை குறித்து விளக்கினார். இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், அமைச்சர் மா.சுப்பிரமணி யத்தை கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தந்து ஆய்வு செய்தார். அங்குள்ள எக்ஸ்ரே அறைக்குச் சென்று அதனுடைய செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன் ஆகியோரிடம் மருத்துவமனை வசதிகள் குறித்து விசாரித்தார்.

இதையடுத்து மத்திய அரசின் சிறுபான்மை நிதி, மாநில அரசு நிதி, எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை கொண்டு ஆஸ்பத்திரியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

நவாஸ் கனி எம்.பி., காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோர் விருதுநகர் மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை 2 இடங்களில் செயல்ப டுகிறது. அது போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பரிசீலனை செய்வதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், சுகாதார இயக்குநர் செல்வநாயகம், ராமநாதபுரம் இணை இயக்குநர் நலப்பணிகள் ஸ்டீபன் ராஜ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், முன்னாள் சேர்மன் பசீர் அஹமது, கீழக்கரை தி.மு.க மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார், கவுன்சிலர்கள் சுகைபு, முகம்மது காசிம், முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News