உள்ளூர் செய்திகள்

கீழக்கரை மாணவருக்கு துபாயில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு நடந்தது.

மாணவர்ஆசிய அளவில் சாதனை

Published On 2022-06-09 08:53 GMT   |   Update On 2022-06-09 08:53 GMT
  • கீழக்கரை மாணவர்ஆசிய அளவில் சாதனை படைத்தார்.
  • ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த இம்பாலா சுல்தான். இவரது மகன் இன்ஷாப் முகமது. கொடைக்கானல் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தாயார் நித்தாஷா பர்வீன் மற்றும் அல் ரய்யான் என்ற சகோதரியும் உள்ளனர்.

இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்த கத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார். முந்தைய சாதனையில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்தான்.

அதனை முறியடிக்கும் வகையில் ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார். மேலும் 2022 ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்து ள்ளதை மாணவனை பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் கபீர் சாகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவருடைய சாதனை 18 நாடுகளை சேர்ந்த ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் க்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான விருதும் பெற்றுள்ளார். 11 வயதைச் சேர்ந்த இளம் சாதனையாளர் இன்ஷாப் முஹம்மதை கவுரவிக்கும் வகையில் துபாய் வருகை தந்த அவருக்கு இந்திய துணை தூதரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூதரக அதிகாரி ராம்குமார் வரவேற்று பாராட்டி பரிசு வழங்கினார். ஈமான் சார்பில் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

எமிரேட்ஸ் டென் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் இளவரசன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் இவர் கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறார். ஒலிம்பிக்கில் மத்திய, மாநில அரசுகள் தனக்கு வாய்ப்பு வழங்கினால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்வேன், என்றார்.

Tags:    

Similar News