உள்ளூர் செய்திகள்

ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்

Published On 2023-10-10 08:38 GMT   |   Update On 2023-10-10 08:38 GMT
  • புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
  • இதுவரை 20 சதவீத பணிகள் முடிவ டைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையத்தை இடித்து விட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் அதே இடத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.

சுமார் 150 மீட்டர் நீளத்திலும், 120 மீட்டர் அகலத்திலும் பஸ் நிலையம் கட்டுவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. இதில் ஒவ்வொரு தூண்களும் சுமார் 4 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 35 பஸ்கள் நிறுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தவிர பஸ் நிலையத்தில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் வந்து செல்ல வசதியாக தனி பாதையும் அமைக்கப்பட உள்ளன. இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கும் தனியாக வாகன நிறுத்துமிடமும், 100-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகளும் கட்டப்பட உள்ளன.இந்த கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள் ளதாகவும், இதுவரை 20 சதவீத பணிகள் முடிவ டைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News