- வருமான வரி தாக்கல் செய்ததில் முறைகேடு செய்த நல்லாசிரியர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி காவல் நிலைய சரகம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கே.ராமச்சந்திரன்(38) என்பவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் வருமான வரி தொடர்பான நிறுவனத்தை மதுரை, ராமநாத புரம் ஆகிய இடங்க ளில் நடத்தி வருகிறார்.
இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்று கொடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக ரூ. 2 கோடியே 84 லட்சம் திரும்ப பெற்றுக் கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் சி.பி.ஐ. கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து 2022ம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பிணையில் வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் ரூ. 12 லட்சம் வங்கி மூலம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் இருவருக்கும் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை இருப்பதால் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.