உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

Published On 2023-06-03 07:03 GMT   |   Update On 2023-06-03 07:03 GMT
  • குடிநீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
  • சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில், மேலத் தெரு மற்றும் கிழக்குத்தெரு பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் ஒரு வாரமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிதண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி மேற்கண்ட பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ய தயாராகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணி மேகலை மற்றும் மண்டல அதிகாரி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட போவதாக கூறி அதிகாரி களுடன் வாக்குவாத்தில் னஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டும், அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News