அடிப்படை வசதி இல்லாததால் ரேசன் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம்
- அடிப்படை வசதி இல்லாததால் ரேசன் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்தினர்.
- ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.
சாயல்குடி
சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் ஊராட்சி ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேசன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள காணிக் கூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்றும் வாங்கி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ரேசன் பொருட்களை கொடுக்கா மல் கைரேகையை மட்டும் வாங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் போட வேண்டிய ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் பொதுமக்கள் தங்கள் ரேசன் அட்டைகளை சாலை யில் வீசி போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஒச்சத்தேவன் கோட்டை கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்கு நிறுத்தப்பட்ட ரேசன் பொருட்களை மீண்டும் விநியோகம் செய்ய வேண்டும். எங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கா மல் காலம் தாழ்த்திய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்காத பட்சத்தில் ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.