நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
- நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
- ராமநாதபுரம் கலெக்டர் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சக மும், தமிழ்நாடு அரசு கைத் தறி துறையும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவி லான சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கண் காட்சியை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-
கைத்தறி கண்காட்சி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இதன் நோக்கம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே ஆகும். இந்த கண்காட்சி யில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில் பல்வேறு ஊர்க ளில் சிறப்பு வாய்ந்த கைத்தறி ரகங்கள் கிடைக் கும். மேலும் தமிழக அரசு வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு ஆடை ஒன்று 30சதவீதமும், பட்டு ரகங்களுக்கு ரூ. 300 வரை தள்ளுபடியும் வழங்கப்படு கிறது. சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படு கின்றது. மேலும் இந்த சிறப்பு கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப் படுகிறது
கடந்த ஆண்டு நடத்தப் பட்ட கண்காட்சியில் ரூ.65.89 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. பண்டிகைகளுக்கு கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை உதவி இயக்குநர் ரகுநாத், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரபாகரன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேஷய்யன், கோதண்ட ராமன், கைத்தறித்துறை ஆய்வு அலுவலர் ரத்தின பாண்டி, கைத்தறி அலுவலர் லட்சுமி வெங்கட சுப்பிர மணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.