- பயன்பாட்டிற்கு வராத கழிப்பறைகளாகள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
- ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றனர்.
கீழக்கரை
ஏர்வாடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் 2020ம் ஆண்டிற்கான 4 சமுதாய கழிப்பறைகள் ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் யாத்ரீகர்கள் அவதிப்படு கின்றனர்.
இதே போல் ஏர்வாடி பஸ் நிலையம் அருகே கழிப்பறை வாளாகம் பொது மக்களுக்கு பயன் பாடின்றி பூட்டி வைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து யாத்ரீகர்கள் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய கழிப்பறையை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கழிப்பறை களுக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.
ஆட்களை நியமித்து பராமரித்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயன்பாடின்றி பூட்டியே வைத்திருப்பதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. கழிப்பறையின்றி திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றனர்.