உள்ளூர் செய்திகள் (District)

சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு யூரியா

Published On 2022-09-22 06:38 GMT   |   Update On 2022-09-22 06:38 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா வழங்கப்படும்.
  • விவசாயிகள் வேளாண் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் பகுதி யில் உள்ள மேலாண்மை துறையின் உரக்கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்அபோதுவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பா பருவ நெல் விதைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 312.7 மீ.மி மழை பெய்துள்ளது.

இம்மழையினை கொண்டு விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 31ஆயிரத்து 36 ஹெக்டர் வரை பயிர் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கு யூரியா 4,695 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் கிரிப்கோ யூரியா 1,500 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 373.5 மெ.டன் கிரிப்கோ யூரியா கொண்டுவரப்பட்டது, மேலும் தற்போது 30 மெ.டன் வரப்பெற்றுள்ளது.

இதன் மூலம் 1579 மெ.டன் யூரியா, 1729 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 118 மெ.டன் பொட்டாஷ், 2570 மெ.டன் காம்ப்ளஸ், 50 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் என மேற்கண்ட உரவகைகள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு எந்தவித உரத்தட்டுப்பாடு இன்றி நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி வேளாண் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா, வேளாண்மை உதவி இயக்குனர் நாக ராஜன், ராமநாதபுரம் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News