வாழவந்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- வாழவந்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- நெல்மடூர் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் செய்திருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே நெல்மடூர் கிராமத்தில் ஸ்ரீ வாழவந்தாள் அம்மன், வைரவர் சுவாமி கோவில் உள்ளது. நேற்று இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா 2 தினங்களுக்கு முன் தொடங்கியது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக் கிரக ஹோமம், கோ பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து முதலாம் கால யாகபூஜை, 2-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் திரவிய ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதன்பின் பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நெல்மடூர் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் செய்திருந்தனர்.