- பனைக்குளத்தில் கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.
- முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளத்தில் பனைக்கும் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கம், தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் ஜெய்னுல் அஸ்ஸலாம், முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, ஊராட்சி தலைவர் பவுசியா பானு, ஜமாஅத் செயலாளர்கள் முகமது ரோஸ் சுல்த்தான், சாகுல் ஹமீது, பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் செய்குல் அக்பர், துணைத் தலைவர் முகமது களஞ்சியம், ஒருங்கினைப்பாளர் அபு முகம்மது, உதவி செயலாளர் பாலமுருகன், பொருளாளர் முகம்மது ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
இம்முகாமில் கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் சிகிச்ைச மேற்கொள்ளப்பட்டது மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு ஊராட்சி மன்ற தலைவி பவுசியாபானு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அசோலா பாசி வளர்ப்பிற்கான படுக்கைகள் வழங்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன், உதவி மருத்துவர்கள் நிஜாமுதீன், டாப்னி, ஆய்வாளர் பூங்கோதை, பராமரிப்பு உதவியாளர் கண்ணகி ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் 80 பயனாளிகளின் 146 மாடுகள், 365 வெள்ளாடுகள், 85 செம்மறியாடுகள், 175 கோழிகள், 8 நாய்கள் பயன் பெற்றன. முடிவில் சமூக ஆர்வலர் சிராஜ் மைதீன் நன்றி கூறினார்.