விநாயகர் சதுர்த்தி விழா முளைப்பாரி ஊர்வலம்
- அபிராமம் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
- சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் உருவ படத்தை திறந்து வைத்தார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மின்னொளி அலங்கார தேரில் விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் முன்பு ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து சென்றனர். அபிராமம் பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகரச் செயலாளருமான ஜாகிர் உசேன் விழாவிற்கு தலைமை தாங்கி முளைப் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் உருவ படத்தை திறந்து வைத்தார். விழாவில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி, வார்டு கவுன்சிலர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பகுதியினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, கோவில் நிர்வாகி நாகராஜன், மற்றும் அகமுடையார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.