பிரம்ம தீர்த்த குளத்தில் தண்ணீர் வெளியேற்றம் தீவிரம்
- பிரம்ம தீர்த்த குளத்தில் தண்ணீர் வெளியேற்றத்தை தீவிரமாக நடந்து வருகிறது.
- மீன்கள் செத்து மிதந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே திருஉத்தர கோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால்தொடர்ந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பாக ராமநாதபுரம் செல்லும் சாலையில் 3 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம தீர்த்த தெப்பக்குளம் அமைந்துள்ளது.
பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில் 2000-ம் ஆண்டு வரை பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வந்தனர். வீடுகளில் உள்ள கழிவுநீர் பிரம்ம தீர்த்த குளத்தில் கலந்ததால் நீராடுவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்தது. இதனால் பக்தர்கள் தலையில் மட்டும் தண்ணீர் தெளித்து சாமி தரிசனம் செய்து வந்தனர். கடந்த ஜூன் 19-ந்தேதி பிரம்ம தீர்த்த தெப்பக்கு ளத்தில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. இதைக் கண்டு ஏராளமான பக்தர்கள் பிரம்ம தீர்த்தத்தில் உள்ள தண்ணீரை சுத்தம் செய்யு மாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் சார்பில் பிரம்மதீர்த்த தெப்பக் குளத்தை தூய்மை செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. அதன்பின் மழை நீர் சேகரிப்பு முறையில் தூய்மையான நீர் குளத்தில் சேகரிக்க திட்ட மிட்டுள்ளனர்.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில், திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில், கோவிலின் சரக பொறுப்பாளர் சரண்யா மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.