ராமநாதபுரம் மிளகாய் வர்த்தகர்கள் சங்கம் வரவேற்பு
- முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கொண்டது.
- ராமநாதபுரம் முண்டு மிளகாய் வர்த்தக சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் முண்டு மிளகாய் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதற்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இலங்கை, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் இந்த முண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.
இதன் மகத்துவம் உணர்ந்து ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்க தலைவர் மங்களசாமி கூறி யதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலை பயிர்களில் 'முண்டு மிளகாய்' ரகமும் ஒன்று என்பதால், அதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று ராமநா தபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பில் 2013-ம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது புவிசார் குறியீடு கிடைத்து இருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வரப் பிரசாதம்.
இதன் மூலம் முண்டு மிளகாய் விலை அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மத்தியில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசுக்கு ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.