உள்ளூர் செய்திகள்

தேளுர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்த போது எடுத்த படம்.

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-06-16 08:31 GMT   |   Update On 2022-06-16 08:31 GMT
  • தொண்டி அருகே மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தேளுர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர் முன்னிலை வகித்தார். திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன் வரவேற்றார்.

சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குருச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட நல தாசில்தார் சாந்தி, திரு வாடானை யூனியன் சேர்மன் முகமது முக்தார் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கணிணி திருத்தம், விலையி ல்லா தையல் எந்திரம், விலையில்லா பேட்டரி மருந்து தெளிப்பான், காய்கறி விதைகள், மின்னணு குடும்ப அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.

வருவாய் துறை, பேரிடர் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலைத்துறை, உணவுப்பொருட்கள் வழங்கல் துறை, மின்துறை, வனத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தேளுர் பஞ்சாயத்து தலைவர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News