மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை பதிவு செய்ய பெண்கள் ஆர்வம்
- மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்ய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மகளிர் உரிமைத் தொகைக்கு கமுதி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்ப படிவங்கள், ரேசன் கடைகளில் பெற்று கடந்த 24-ந் தேதி முதல் வழங்கப்பட்டது.
கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதி மற்றும் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் என 2 இடங்களில், இதற்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் தங்களது உரிமைத் தொகையை பெறுவதற்கான மனுக் களை கொடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வருவாய் ஆய்வாளரும், மண்டல அலுவலருமான மணி வல்லபன் முன்னிலையில், தன்னார்வலர்கள், பொறுப்பு அலுவலர்களும் இந்த மனுக்களை பெற்று பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது வரை 1500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் கிராம பகுதியில் உள்ள பெண்களுக்காக பசும்பொன், செங்கப்படை, பாக்குவெட்டி, மரக்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் மொத்தம் 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மகளிர் உரிமைத் தொகைகாண மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.