உள்ளூர் செய்திகள்

சபரிமலைக்கு உணவு பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி

Published On 2023-11-16 09:20 GMT   |   Update On 2023-11-16 09:20 GMT
  • அய்யப்ப சேவா சமாஜம் மூலம் நடந்தது
  • 250 சேவகர்கள் வீதம் 65 நாட்களுக்கும் சேவையாற்ற உள்ளனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை , சிப்காட்டில் வேலூர் மண்டல அய்யப்ப சேவா சமாஜத்தின் மூலம் சபரிமலைக்கு உணவுக்கான மளிகை பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இது குறித்து சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு மாநில தலைவர் குருசாமி ஜெயசந்திரன் கூறியதாவது:-

சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் சன்னிதானத்தில் சேவை பணிக்காக அய்யப்ப சேவா சமாஜத்தின் சேவகர்கள் சேவை பணிக்காக சன்னிதானத்தில் தினமும் குறைந்தது 250 சேவகர்கள் வீதம் 65 நாட்களுக்கும் சேவையாற்ற உள்ளனர்.

இதன்படி சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் விநியோகம் செய்தல், சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க சேவை பணியாற்றுதல், ஸ்ட்ரெச்சர் சர்வீஸ் போன்ற எண்ணற்ற சேவை பணிகளை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு சேவைக்காக வருகின்ற 250 க்கு மேற்பட்ட சேவகர்களுக்கும் 3 வேலையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 750 க்கும் மேற்பட்ட சேவகர்களுக்கு 65 நாட்களும் சுமார் 50,000 நபர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பினையும் வட தமிழகம் ஏற்றுள்ளது.இதற்கான உணவு,மளிகை பொருட்களை சென்னை மண்டலம், வேலூர் மண்டலம், சேலம் மண்டலம், கடலூர் மண்டலம் என 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும் சபரிமலைக்கு மளிகை பொருட்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மண்டலம் சார்பில் இன்று (நேற்று)அனுப்பபடுகிறது.

சன்னிதானத்தில் மூலிகைகுடிநீர் விநியோகம் செய்வதற்காக வேலூர் மாவட்ட தலைவர் நித்தியானந்தம், ரமேஷ் மற்றும் சஞ்சய் ஆகியோரின் கூட்டு முயற்சியால் தண்ணீர் எடுத்து செல்லும் 3 டிராலிகளையும் வேலூர் மாவட்டத்தின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மண்டலம் சார்பில், உணவு, மளிகை பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு மாநில தலைவர் குருசாமி. ஜெயசந்திரன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் நிர்வாகிகள்பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News