உள்ளூர் செய்திகள்
சென்னை-பெங்களூர் 6 வழிச்சாலையில் கவுன்சிலர்கள் திடீர் மறியல்
- போக்குவரத்து பாதிப்பு
- காவேரிப்பாக்கம் ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு
நெமிலி:
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒரு தலைபட்சமாக தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதாக கூறி அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் காவேரிப்பாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென சென்னை-பெங்களூர் 6 வழிச்சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.