முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு தபால் அனுப்பிய ஊராட்சி செயலாளர்கள்
- 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
- 176 தபால்கள் அனுப்பப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவுக்கு, 5-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தபால் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். இதேபோல் கிராம ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு மாதம் 10-ஆயிரம் வழங்க வேண்டும். அதே சமயம் இவர்களுக்கு காலமுறை ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும்.
மேலும் அலுவலகம் நேரம் தாண்டி பணிகள் செய்ய நெருக்கடி நிலைமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும், உள்ளிட 5-அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.
அப்போது 29-ஊராட்சியில் இருந்து 176- தபால்கள் அனுப்பப்பட்டது.