உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசியை கடத்தி வந்த லாரி கவிழ்ந்து விபத்து- 10 டன் அரிசி பறிமுதல்

Published On 2022-10-15 10:35 GMT   |   Update On 2022-10-15 10:35 GMT
  • ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது.
  • லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி மர்ம நபர்கள் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றனர். திடீர் என லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஏரியில் கவிழ்ந்த லாரியில் 10 டன் அளவில் 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் இருந்தது. ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி ஏரி பகுதியில் கவிழ்ந்தது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சோமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். லாரியில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. லாரி ஓட்டி வந்தது யார் என்பது குறித்து காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News