உள்ளூர் செய்திகள்

ஆர்.டி.ஓ. சுப்புலெட்சுமி மூதாட்டி ஒருவருக்கு சால்வை அணிவித்த காட்சி.


சங்கரன்கோவிலில் மூத்த குடிமக்களை கவுரவித்த ஆர்.டி.ஓ.

Published On 2022-10-02 09:06 GMT   |   Update On 2022-10-02 09:06 GMT
  • நூறு வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்களை கவுரவித்து தேர்தல் ஆணைய சான்று வழங்கப்பட்டது.
  • அதிகாரிகள் அனைவருக்கும் பாண்டியன் தான் எழுதிய புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்திரவின் படி 80 வயதிற்கு மேல் நூறு வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்களை கவுரவித்து தேர்தல் ஆணைய சான்று வழங்கப்பட்டது.

இதன் ஒரு நிகழ்வக சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் ஆர்.டி.ஓ. சுப்புலெட்சுமி, தாசில்தார் பாபு, தேர்தல் துணை தாசில்தார் ரவிகணேஷ், தேர்தல் உதவி அலுவலர் சுந்தர், களப்பாகுளம் கிராம உதவியாளர் தமீம் அன்சாரி ஆகியோர் மூத்த குடிமக்கள் அனைவரது வீடுகளுக்கும் நேரடியாக வருகை தந்து சால்வை அணிவித்து மரியாதை செய்து கவுரவித்தனர்.

என்.ஜி.ஓ. காலனி இந்திரா தெரு 85 வயதான பிச்சம்மாள் ஆவுடையப்பன் மற்றும் திருவள்ளுவர் தெரு 81 வயதான கோமதி கல்யாண சுந்தரம் ஆகியோர்களுக்கும் ஆர்.டி.ஓ. சால்வை அணிவித்து கவுரவித்தார். சேக்கிழார் தெரு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை தலைவர் 83 வயதான பாண்டியனுக்கு தாசில்தார் பாபு சால்வை அணிவித்து கவுரவித்தார். தனது வீட்டிற்கு நேரடியாக வருகை தந்த அதிகாரிகள் அனைவருக்கும் பாண்டியன் தான் எழுதிய உடல் ஆரோக்கியம் குறித்த புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

சந்திப்புகள் எளிதாக அமைந்திட அனைத்து வீடுகளுக்கும் அழைத்து சென்று மூத்த குடிமக்களை அதிகாரிகளுக்கு வார்டு கவுன்சிலர் ஜலாலுதீன் அறிமுகம் செய்தார்.

Tags:    

Similar News