உள்ளூர் செய்திகள்

தவறவிட்ட செல்போனை துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் உரியவரிடம் ஒப்படைத்தார்.

பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

Published On 2023-10-16 10:22 GMT   |   Update On 2023-10-16 10:22 GMT
  • பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  • தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலையில் செல்பவர்கள் செல்போன்களை தவற விட்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடு க்கப்பட்ட செல்போனை கும்பகோணம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசார், தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட செல்போன் குறிப்புகளோடு ஒத்துப்பார்த்ததில் 15 பேருக்கு சொந்தமான செல்போன் பற்றிய விவரங்கள் ஒத்துப்போனது. பின்னர், புகார்தாரர்கள் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 15 செல்போன்களை உரியவ ர்களிடம் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் ஒப்படைத்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் நிருபர்களிடம் கூறுகையில்:-

செல்போன் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கும்பகோணம் சரக பகுதியில் செல்போன் மட்டுமல்லாது திருட்டு போன அனைத்து பொருட்களையும் விரைவில் மீட்கப்படும் என்றார்.

Tags:    

Similar News