உள்ளூர் செய்திகள்

கால்நடை பராமரிப்புத் துறையில் ஆட்சேர்ப்பு- வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்-கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-06-14 08:46 GMT   |   Update On 2022-06-14 08:46 GMT
கால்நடை பராமரிப்புத் துறையில் ஆட்சேர்ப்பு- வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது:-

கால்நடை பராமரிப்புத் துறையில் அனிமல் ஹேண்ட்லர், அனிமல் ஹேண்ட்லர் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு 90 மணி நேரம் பயிற்சி அளித்து, ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜுன் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்தி கொள்ளுமாறு செல்போன்களில் வாட்ஸ் அப் செயலி மூலம் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை என தெரிவிக்கப்படுகிறது.

கால்நடை பராமரிப்புத் துறைக்கு தொடர்பில்லாத தவறான இத்தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம். இதுபோன்ற தகவல்கள் பரப்புபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News