உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

நிலப்பிரச்சனை தொடர்பாக முதியவர்களை தாக்கிய அரசு ஊழியர்கள்

Published On 2022-11-21 09:39 GMT   |   Update On 2022-11-21 09:39 GMT
  • ராசமுத்து (வயது 67), இவரது மனைவி தனம் (60) ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
  • இந்நிலையில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகியோர் எங்களை அடிக்கடி மிரட்டி வருகின்றனர்.

சேலம்:

சேலம் முருங்கப்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராசமுத்து (வயது 67), இவரது மனைவி தனம் (60) ஆகியோர் தங்களின் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் பெத்தாம்பட்டியில் 45 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு தவமணி என்கிற ராஜகணபதி, தமிழன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நாங்கள் கூட்டு குடும்பமாக, விசைத்தறி தொழில் செய்து வருகிறோம்.

இந்நிலையில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகியோர் எங்களை அடிக்கடி மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே எங்களுக்குள் நிலப் பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.

நேற்று முன்தினம், எங்கள் நிலத்தை அளந்து சர்வேயர் எல்லை கல் நட்டார். அடுத்த சில மணி நேரத்தில், துணை தாசில்தார், வணிக வரித்துறை ஊழியர் ஆகிய இருவரும் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது மனைவி மற்றும் மகன்களை தாக்கிவிட்டு சென்றனர். தற்போது எனது மூத்த மகன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News