உள்ளூர் செய்திகள்

பரமத்தி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்

Published On 2022-12-01 09:45 GMT   |   Update On 2022-12-01 09:45 GMT
  • பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர்.
  • கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம், நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பேருந்து நிலையம், மற்றும் பரமத்தியில் நாமக்கல் மோட்டார் வாகன அலுவலர் முருகன் மற்றும் பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர். கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம்,நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

மேலும் இரவு நேரத்தில் பரமத்தி நகருக்குள் பேருந்துகள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது பரமத்தி தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்களும், பெண்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வேலூர் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்த நாமக்கல் போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பரமத்தி நகருக்குள் சென்று நாமக்கல் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் அந்தந்த பேருந்துகளுக்கென வாங்கிய உரிமம் அடிப்படையில் அந்தந்த வழித்தடங்களில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர். பரமத்தி நகருக்குள் செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News