கடலூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்
- தங்களுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர்.
- தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலு வலக சாலை மற்றும் மஞ்சக்குப்பம் மைதா னத்தை சுற்றிலும் 170-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஆக்கிரமிப்பு கடைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநக ராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர்கள், தங்க ளுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றாமல் சென்றனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் சில நாட்களாக ஆக்கிரமிப்பு கடைகளை தாங்களாக அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி ஊழி யர்கள் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடை களை போலீஸ் பாதுகாப்பு டன் பொக்லைன் எந்திரங் கள் மூலம் அகற்றினர். அப்போது அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.
இதில் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையே பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதா னப்படுத்தினார். தொடர்ந்து தரைக் கடை மற்றும் தள்ளு வண்டி கடைகளை தவிர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.