- கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் நெகிழி ஒழிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றம்.
- மயானகரை மற்றும் கோட்டகம் செல்லும் சாலையில் உள்ள கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டுமேடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், ஓவர்சியர் மகேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் நெகிழி
ஒழிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின்படி ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் சாலையோரம் எல்லநாகலடி மயானகரை மற்றும் கோட்டகம் செல்லும் சாலையில் உள்ள கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.