உள்ளூர் செய்திகள்

சிறைப்பிடிக்கப்பட்ட லாரியை படத்தில் காணலாம்.

கடையம் அருகே விளை நிலங்களில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றம் - பஞ்சாயத்து தலைவர் அதிரடி நடவடிக்கை

Published On 2022-10-02 09:08 GMT   |   Update On 2022-10-02 09:08 GMT
  • குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் லாரி களில் கொண்டு வந்து கொட்டப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
  • லாரிகளை கடையம் பெரும் பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா உள்ளிட்டோர் சிறைபிடித்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட மேட்டூரின் மேற்பகுதியில், மேட்டூரிலிருந்து கடவா காடு செல்லும் சாலையையும் மேட்டூர் தோரணமலை சாலையையும் இணைக்கும் சாலையின் மேற்புறம் உள்ள விளை நிலங்களில் தென்காசி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் லாரி களில் கொண்டு வந்து கொட்டப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அப்பகுதி சுகாதாரமற்ற பகுதியாக காணப்பட்டது. இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதற்காக வந்த லாரிகளை கடையம் பெரும் பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன், ஊராட்சி செயலர் ஆனைமணி, கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News