- தர்கா வரலாற்றிலேயே இது ஒரு சாதனை நிகழ்வு, இந்த சரித்திர கால நிகழ்வில் நானும் இருப்பது மகிழ்வான தருணம்.
- நாகூர் தர்காவை உலகிலேயே முதல் சூரிய ஒளியில் இயங்கும் தர்காவாக மாற்றுவது, யாத்தீரக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றப்படும்.
நாகப்பட்டினம்:
உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் உள்ள நூறு வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த மண்டபங்களை புணரமைக்க தமிழக அரசு கடந்த 2022-23ம் ஆண்டு தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி ஒரு கோடியே நாற்பது லட்சம் நாகூர் தர்கா பெயரிலேயே கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட காசோலை வழங்கியது.
இந்த மராமத்து பணி துவங்குவதற்கான டெண்டர் விடும் பணி முறைப்படி வரும் வாரங்களில் துவங்க இருக்கிறது. புதுப்பிக்கப்பட இருக்கின்ற மண்டங்களை நாகை ஷாநவாஸ் எம்.எல்.ஏ நாகூர் தர்காவிற்கு ேநரில் சென்று கள ஆய்வு செய்தார்.
நாகூர் தர்காவினுள்உள் உள்ள எல் கருங்கல் மண்டபம், சிறிய மையாத்தாகொல்லை மண்டபம், கால்மாட்டு வாசல் வாலை மண்டபம், கிழக்கு வாசல் இடப்புற மண்டபம், வலப்புற மண்டபம் ஆகிய மண்டபங்களை பார்வையிட்டார். சட்டமன்ற உறுப்பினர் உடன் நாகூர் தர்கா பிரசிடன்ட் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், பெருமராமத்து கணக்கர் ராஜேந்திரன், தர்கா அலுவலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஷாநாவஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
நாகூர் தர்காவுக்கு அரசு மராமத்து பெரு மானியம் பெறப்பட்டது. தர்கா வரலாற்றிலேயே இது ஒரு சாதனை நிகழ்வு, இந்த சரித்திர கால நிகழ்வில் நானும் இருப்பது மகிழ்வான தருணம். மேலும் நாகூர் தர்கா மார்கெட் பார்க்கிங் வசதியுடன் புணரமைப்பது, நாகூர் தர்கா சார்பாக கல்வி கூடங்கள் உருவாக்குவது, நாகூர் தர்கா சார்பாக மருத்துவமனை, சமத்துவ கூடம், நாகூர் தர்காவை உலகிலேயே முதல் சூரிய ஒளியில் இயங்கும் தர்காவாக மாற்றுவது, யாத்தீரக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற தர்கா நிர்வாகத்தில் உள்ள அனைத்து திட்டங்களையும் படிபடிப்யாக அரசு மற்றும் தனியார் உதவியுடன் நிறைவேற்றி தர முழு முயற்சி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.