உள்ளூர் செய்திகள்

புல்லாவெளி பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பெரும்பாறை அருகே மழையால் சேதமடைந்த சாலையில் சீரமைப்பு பணி

Published On 2022-11-30 04:22 GMT   |   Update On 2022-11-30 04:22 GMT
  • கனமழையால் புல்லாவெளி பகுதியில் உள்ள சாலை தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது.
  • புதிதாக தடுப்பு சுவர் அமைத்து சிமெண்ட் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரும்பாறை:

பெரும்பாறை அருகே புல்லாவெளியில் கடந்த மாதம் புதிதாக தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதனால் புல்லாவெளி பகுதியில் உள்ள சாலை தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமம் ஏற்பட்டது. எனவே சேதமடைந்த பகுதியில் புதிதாக தடுப்பு சுவர் அமைத்து சிமெண்ட் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப்பணியை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரத், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News