உள்ளூர் செய்திகள் (District)

கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

கடலூரில் எரிவாயு தகன மேடையைபயன்பாட்டிற்கு கொண்டு கோரிமார்ச் 7-ந்தேதி போராட்டம்:பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

Published On 2023-02-28 09:23 GMT   |   Update On 2023-02-28 09:23 GMT
  • கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்..
  • எரிவாயு தகன மேடை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி, சட்ட ஆலோசகர் திருமார்பன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு ராமலிங்கம், சுப்புராயன், மன்சூர், சிவாஜி கணேசன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கடலூர் மாநகராட்சியில் மஞ்சக்குப்பம் மற்றும் கம்மியம்பேட்டையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடை சரியான முறையில் இயங்காமல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கடலூர் மாநகர மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சியாக உள்ளதால் நவீன எரிவாயு மின் தகன மேடை 4 திசைகளிலும், நகரின் மையப் பகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும். இது அனைத்து தர மக்களுக்கும் பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.இதிலும் தற்போது உள்ள எரிவாயு தகன மேடை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் மார்ச் 7-ந்தேதி எரிவாயு தகன மேடையில் பாடை கட்டி ஒப்பாரி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News