ஆற்றங்கரைகளில் பயன்தரும் மரங்களை வளர்க்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- பூமி வெப்பமயமாதலை தடுக்க ஆற்றங்கரைகளில் பொதுப்பணித்துறை கரை காவலர்களை கொண்டு சமூக காடு வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும்.
- மழை காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் சமூக காடுகள் வளர்க்கப்பட வேண்டும்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, முடிகொண்டான், அரச லாறு, சுள்ளான் ஆறு, திருமலைராஜன் ஆறு, உள்ளிட்ட ஆறுகளின் கரைகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாசுகளை குறைக்கும் வகையில், பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரை சேமிக்க கூடியவகையில், ஆற்றங்கரைகளில், பொதுப்பணித்துறை கரை காவலர்களைகொண்டு, சமூக காடுவளர்க்கும் திட்டத்தை அமுல்படு த்தப்பட வேண்டும்.
இதனால் சுற்றுப்புற சூழல் பேணி காப்பதோடு, அரசு நிலங்களை, பாதுகாக்கவும், ஆற்றுக்கரைகளில் சேதம் ஏற்படாத வகையில் பாதுகாக்கவும், மழை வெள்ள காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து, கிராமங்க ளைப் பாதுகாக்கும் வகையில், இந்த சமூக காடுகளை வளர்க்கப்பட வேண்டும்.
எனவே பொதுப்பணித் துறையின் மூலம், ஆற்றங்க ரைகளில் வலுப்படுத்தும் வகையில், பயன் தரும் மரங்களை வளர்த்து, கரைகளை வலுப்படுத்தவும் அதோடு, அரசுக்கு வருவாய் ஆதாரம் தேடும் வகையில், அவற்றில் குத்தகைக்கு விட லாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.