உள்ளூர் செய்திகள்
பூலாங்குளத்தில் கோவில் முன்பு கொட்டப்பட்ட மண்ணை அகற்ற கோரிக்கை
- தனியார் பட்டா நிலத்தில் கட்டிடத்தை இடித்து அகற்றிய மண் கொட்டப்பட்டுள்ளது.
- மண் கொட்டப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
தென்காசி:
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுபூலாங்குளம் கிராமத்தில் நடுத்தெரு பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலின் முன்பாக தனியார் பட்டா நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய கட்டிடத்தை இடித்து இரவில் எவ்வித அனுமதியும் பெறாமல் அகற்றிய மண் அனைத்தையும் டிராக்டர் மூலம் கொட்டி வைத்துள்ளார். முருகன் கோவிலின் வாயிலில் கொட்டியுள்ளதால் கோவிலுக்கும் வரும் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதி இன்றி கொட்டப்பட்ட மண்ணை உடனடியாக அகற்றிட சம்பந்தப்பட்ட பூலாங்குளம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.