கண் பார்வை தெரியாத மூதாட்டி மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு
- மருத்துவ கல்லூரி வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கண் பார்வை தெரியாத மீனா என்ற மூதாட்டி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
- மனநல சிகிச்சை, உணவு, உடை, சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல் அளித்து மீனாவின் முகவரியை கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்ப்பதே லட்சியம் ஆகும் என்றார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்படி திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கண் பார்வை தெரியாத மீனா (வயது 61) என்ற மூதாட்டி சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
அவரை சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம், காவல்துறை, திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகம் ஒருங்கிணைப்புடன் இணைந்து மீட்டெடுத்து மருத்துவ கல்லூரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க ப்பட்டது.
இதையடுத்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை அறிவுரை யின் பேரில் குழந்தைகள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமேகலை, ஓ. எஸ் .சி. நிர்வாகி சுமிதா மற்றும் பணியாளர்கள், தலைமை காவலர்கள் மீனாட்சி, அகிலா, முதி யோர் உதவி மைய ரவி , மற்றும் காவலர்கள், திருத்து றைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் உரிய பாதுகாப்பிற்காகவும் தகுந்த மனநல சிகிச்சை கொடுத்து, மறுவாழ்வு அளிப்பதற்காகவும் சேர்த்தனர்.
நிகழ்வில் நம்பிக்கை மனநல காப்பக சமூக சேவகர் சுபாலட்சுமி, கோகிலா, சரவணன், செவிலியர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டதுடன் கண்பார்வை தெரியாத மூதாட்டியை வைத்து பராமரிப்பது மிகவும் சிரமம் .மனநல மருத்துவர் கொண்டு மனநல சிகிச்சை, உணவு, உடை, சுகாதாரம்," ஆற்றுப்படுத்துதல் அளித்து கொஞ்சம் கொஞ்சமாக அன்பாக அனைவரும் பேசி, பழகி மூதாட்டி மீனாவின் முகவரியை எப்படியாவது கண்டுபிடித்து அவரது குடும்பத்தினருடன் திருவா ரூர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சேர்த்து வைப்பதே எங்களது குறிக்கோளும் லட்சியம் ஆகும் என்றார்.