கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை நேரகட்டுப்பாடு விதிப்பு
- பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
- போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சீர்காழி:
சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாக னங்கள் வந்து செல்ல தடை விதித்து நேர கட்டுபாடு அறிவிக்கப்பட்டு நகர எல்லைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
சீர்காழி நகரில் பிரதான சாலைகளான பிடாரி வடக்கு வீதி, கடைவீதி காமராஜர்வீதி, கொள்ளிடமுக்கூட்டு, பழைய பேந்து நிலையம், தென்பாதி, புதிய பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.
பிரதான சாலைகளில் உள்ள பலசரக்கு விற்பனை கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவற்றுக்கு லாரிகளில் பொருட்கள் எடுத்து வரும்போது சாலையின் இருப்புறமும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றா மல் நிறுத்திவைத்து பொருட்களை இறக்குவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு, வாகனஓட்டிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டது.
பள்ளி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இது குறித்து பொதுமக்கள் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு மீனாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, போக்குவரத்தை சீரமை க்கவும், ஒருவழிப்பாதை, நோபார்கிங் ஆகியவற்றை பின்பற்றாத வாகனஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீஸ்சா ருக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி போக்குவரத்து போலீசார் சீர்காழி நகரில் போக்குவரத்து விதிமுறை களை மீறும் வாகனஓட்டிகளை எச்சரித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி நேரங்களில் நகருக்குள் காலை 8மணி முதல் 10மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6மணிவரையிலும் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் போக்குவரத்து போலீசாரால் அமைக்கப்பட்டது.