உள்ளூர் செய்திகள்

சரபங்கா நதி தடுப்பணையில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற கண்டக்டர் பலி

Published On 2022-08-28 08:23 GMT   |   Update On 2022-08-28 08:23 GMT
  • சங்ககிரி அருகே உள்ள தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது.
  • ஓய்வு பெற்ற கண்டக்டர் தங்கவேல் (வயது 67) என்பவர் தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் சென்ற போது சறுக்கி, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

சங்ககிரி:

சங்ககிரி அருகே உள்ள தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இந்த தடுப்பணையின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் வழிந்தோடுவதால், அந்த பகுதி பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற கண்டக்டர் தங்கவேல் (வயது 67) என்பவர் தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் சென்ற போது சறுக்கி, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News