- 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர்.
- குன்னூர் வட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்திற்கு நுழைவாயிலாக பர்லியார் சோதனை சாவடி உள்ளது. குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் திடீரென்று இரவு முழுவதும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையக்கூடிய வாகனங்கள் குன்னூர் நகரம் வழியாக தான் செல்ல வேண்டும். வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பர்லியார் சோதனை சாவடி வழியாகத்தான் மாவட்டத்திற்குள் நுழைய முடியும்.
இதையடுத்து இந்த ேசாதனை சாவடியில் வருவாய்த்துறையினர் இரவில் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர். வாகனங்களில் ஏதாவது தேவையற்ற பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதாவது எடுத்து வரப்படுகிறதா என வாகனங்களை ஆய்வு செய்தபின்னர் உள்ளே வர அனுமதித்தனர்.
இதில் குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், வருவாய் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.