தென்காசியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் உதவி கடன்கள்- கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்
- தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினர்.
- 862 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
தென்காசி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் உதவி கடன் உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் இ.சி.ஈஸ்வரன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடனுதவிகளை பயனாளி களுக்கு வழங்கினர்.
தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, 541 ஊரக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிகடன் இணைப்பு தொகை ரூ.38.02 கோடி மதிப்பிலும், 125 நகர்புறம் மகளிர் சுய உதவிக்குழுக்கான தொகை ரூ.11.03 கோடி மதிப்பிலும், 163 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சமுதாய முதலீட்டு நிதி மூலம் ரூ.1.07 கோடி மதிப்பிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 13 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இணை மானியம் தொகை ரூ.29 லட்சம் மதிப்பிலும், 8 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.5 லட்சம் மதிப்பிலும், 12 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய பண்ணை பள்ளிகள் அமைப்பதற்காக தொகை ரூ.8 லட்சம் மதிப்பிலும், என மொத்தம் 862 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.50.54 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) குருநாதன், மாவட்ட தொழில் மைய மேலாளார் மாரியம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஷ்ணு வர்தன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சேக் அப்துல்லா (தென்காசி), சுப்பம்மாள் (கடையநல்லூர்), காவேரி சீனித்துரை (கீழப்பாவூர்) மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.