உள்ளூர் செய்திகள்

ஈக்கள் தொல்லையால் நோய் பரவும் அபாயம்

Published On 2022-08-12 10:13 GMT   |   Update On 2022-08-12 10:13 GMT
  • மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
  • ஈக்கள் தொல்லை யால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு:

மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. சரியான பராமரிப்பு இன்றி உள்ளதால் எங்கள் கிரா மத்தில் குடியிருப்புகளிலும், கால்நடை வளர்ப்புகளிலும் ஈக்கள் தொந்தரவு அதிகமாகி உள்ளது.

இதனால் சுகாதாரக் கேடு நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஈக்கள் தொல்லை யால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக அந்த கோழி பண்ணையை மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ள னர்.

Tags:    

Similar News