உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே வண்டி பாளையம் விநாயகர் கோவில் தெருவில் கழிவு தேங்கியிருக்கும் படத்தை பார்க்கலாம்.

மரக்காணம் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்: சரி செய்ய கிராம பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-05-31 09:07 GMT   |   Update On 2023-05-31 09:07 GMT
  • கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது.
  • பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிபாளையம் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் விவசாயிகள். வண்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் வசிப்ப வர்கள் தினந்தோறும் விளைநிலத்திற்கு செல்வது வழக்கம் அந்த பகுதி விநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் இல்லை. எனவே கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள். எனவே மரக்காணம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக அந்த பகுதியை சீரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News